English to Tamil

1. Worsen (வொர்சென்) - மோசமாகிவிடல்.
அவர்களுக்கு நிலைமை மோசமாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது.
They were afraid that the situation would worsen. 

2. Petty (பெட்டி) - சிறிய. 
கொலை ஒரு சிறிய குற்றமாக கருதப்படுவதில்லை.
Murder is not consider as a petty crime. 

3. Nadir (நடிர்) - தாழ்ந்த நிலை.
அவர்களின் வேதனையால் அவர்கள் தாழ்ந்த நிலையை அடைந்தனர்.
They had reached the nadir because of their sufferings. 

4. Sporadic (ஸ்பொராடிக்) - ஆங்காங்கே.
ஆங்காங்கே எரிபொருள் தட்டுப்பாடு பல பயணிகளுக்கு கோடை காலத்தை துயர் மிகுந்ததாக்குகிறது.
Sporadic gas shortages are making the summer miserable for many travelers. 

5. Industrious (இன்டஸ்டிரியஸ்) - கடுமையாக உழைக்கின்ற. 
அவள் ஒரு கடுமையாக உழைக்கின்ற உழைப்பாளி.
She was an industrious worker. 

6. Malicious (மெலிசியஸ்) - கெடுக்கும் நோக்கம் கொண்ட.
பதிப்பாசிரியர் எழுத்தாளர்களின் கெடுக்கும் நோக்கம் கொண்ட கட்டுரையை வெளியிட மாட்டார்.
The editor will not publish the writer′s malicious article. 

7. Debility (டெபிலிட்டி) - சோர்வு.
அவரது நோய் அவர் சோர்விற்கு காரணமாக இருந்தது.
His debility was due to his illness. 

8. Woozy (வூசி) - குழப்பமான.
அவர் எப்போதும் குழப்பமான முடிவுகளை எடுப்பார்.
He always take woozy conclusion. 

9. Debut (டிபட்) - அரங்கேற்றம்.
எட்டு வயதாக இருக்கும் போதே அந்த நடிகை அரங்கேற்றம் நடத்தினார்.
That actress made her debut when she was eight. 

10. Subtle (சப்டில்) - நுண்ணிய.
அவர் ஒரே மாதிரியான படங்களின் நுண்ணிய வேறுபாட்டை கண்டறியும்படி கேட்டார். 
He asked to identify the subtle differences between the similar pictures.

11. Hail (ஹெய்ல்) - ஆலங்கட்டி மழை. 
இன்று மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழை சுமார் 15 சதவீதம் பதிவாகி உள்ளது.
Today the rain, snow and hail is recorded for about 15 percentage. 

12. Blanket (பிளாங்கட்) - போர்வை.
பனியின் காரணமாக, எனக்கு ஒரு கூடுதல் போர்வை வேண்டும். 
Because of snow, I need an extra blanket. 

13. Mist (மிஸ்ட்) - மூடுபனி. 
சிகரங்கள் மூடுபனியால் மூடி மறைக்கப்பட்டிருந்தன.
The peaks were shrouded in mist. 

14. Frost (ஃப்ராஸ்ட்) - உறைபனி. 
உறைபனியால் அந்த மரங்கள் வெள்ளையாக இருந்தன.
The trees were white by frost. 

15. Snowfall (ஸ்னொஃபால்) - பனிப்பொழிவு.
கடுமையான பனிப்பொழிவால் பயணம் முற்றிலும் சாத்தியமற்றிருந்தது.
The trip was absolutely impossible by heavy snowfalls. 

16. Melt (மெல்ட்) - உருகுதல். 
சூரிய வெப்பத்தில் பனிக்கட்டி உருகிக் கொண்டிருக்கிறது.
The ice is melting in the sun. 

17. Avalanche (அவ்லென்ச்) - பனிச்சரிவு. 
ஒரு சிறிய பனியுருண்டையால், பனிச்சரிவை தொடங்க முடியும்.
A small snowball can start an avalanche. 

18. Snowdrift (ஸ்னொடிரிஃப்ட்) - பனிமேடு.
குடிசைகள் பனிமேடுகளில் புதைக்கப்பட்டது.
The huts was buried in the snowdrifts. 

19. Ecosystem (எக்கோசிஸ்டம்) - சூழ்நிலை மண்டலம்.
ஆற்றல் மற்றும் கரிமம் சூழ்நிலை மண்டலத்திற்குள் ஒளிச்சேர்க்கை மூலம் நுழையும். 
Energy and carbon enter ecosystems through photosynthesis. 

20. Chionablepsia (சையானோப்லெப்ஸியா) - பனிக்குருடு.
பனிக்குருடு என்பது புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் கண்களின் வீக்கம்.
Chionablepsia is inflammation of the eyes caused by exposure to ultraviolet light.

21. Hailstorm (ஹெய்ல்ஸ்டாம்) - ஆலங்கட்டி மழை.
ஆலங்கட்டி மழை பருவகாலம் சார்ந்தவை அல்ல.
Hailstorm is not seasonal. 

22. Blizzard (ப்லிஸாட்) - பனிப்புயல்.
பனிப்புயல் காரணமாக இந்த விமானம் தாமதமானது.
This flight was delayed due to the blizzard. 

23. Severe (சிவர்) - கடுமையான.
இந்த நகரம் கடுமையான புயலால் சேதத்துக்கு ஆளானது.
This city was damaged by a severe storm. 

24. Storm warning (ஸ்டாம் வார்னிங்) - புயல் எச்சரிக்கை.
தமிழ்நாடு அரசு முன் கூட்டியே புயல் எச்சரிக்கையை அறிவித்தது.
Tamilnadu Government announced the storm warning in advance. 

25. Tornadoes (டொர்னொடோஸ்) - சுழற்காற்று.
கோடையில் அடிக்கடி சுழற்காற்று வீசும்.
Tornadoes often blows in the summer. 

26. Hurricane (ஹைரிக்கேன்) - சூறாவளி.
ஒரு சூறாவளி லண்டனை கடந்து, அறுநூறு வீடுகளை சாய்த்தது.
A hurricane passed over London and blew down six hundred houses. 

27. Furious (ஃப்யுரியஸ்) - சீற்றம்.
அமெரிக்கர்கள் கடல் சீற்றத்திற்கு பிறகு தீவை கைப்பற்றினர்.
The Americans took control of the island after furious of the sea. 

28. Tempest (டெம்பெஸ்ட்) - வலுவான புயல்.
அவர்கள் தீ, வெள்ளம், வலுவான புயல் மற்றும் பிற ஆபத்துகளுக்கு எதிராக காப்பீடு செய்ய வேண்டும்.
They have to be insured against fire, flood, tempest and other perils. 

29. Meteorological (மிடிராலிஜிகல்) - வளிமண்டல ஆய்வு.
வளிமண்டல ஆய்வு மையம் புயலை பற்றிய அறிக்கை விடுத்துள்ளது.
Meteorological Center has issued a statement about the storm. 

30. Devastation (டிவாஸ்டேஸன்) - பேரழிவு.
வர்தா புயல் சென்னை மாநகரில் பேரழிவை உண்டாக்கியது.
Vardah storm caused devastation in chennai city.

31. Passionate (பெஸனெட்) - தீவிர ஆர்வம்.
அவள் சமையலை கற்க தீவிர 
ஆர்வத்தைக் கொண்டிருந்தால். 
She has an passionate in learning about the cooking.

32. Pugilist (புஜிலிஸ்ட்) - குத்துச்சண்டை வீரர். 
அவர் ஒரு புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர். 
He is a famous pugilist.

33. Armistice (ஆர்மிஸ்டிஸ்) - போர் நிறுத்த ஒப்பந்தம். 
இத்தாலிய அரசாங்கம் தனது நட்பு நாடுகளுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. 
The Italian government has signed an armistice with their Allies. 

34. Artillery (ஆர்டிலெரி) - பீரங்கி. 
போரில் வெற்றி பெறுவதற்கு போதுமான பீரங்கிகளை எதிரி வைத்திருக்கிறார். 
The enemy has enough heavy artillery to win the war.

35. Beret (பெரெட்) - விளிம்பற்ற தொப்பி. 
நீல விளிம்பற்ற தொப்பி அணிந்த பெண்மணி குளத்தை நோக்கிச் சென்றாள். 
A woman wearing a blue beret moved towards the pond. 

36. Deed (டீட்) - பத்திரம். 
அவர்கள் தங்களது சொத்து பத்திரங்களை கொடுத்தனர். 
They gave the deed of their property. 

37. Deport (டிபொர்ட்) - நாடு கடத்துதல். 
அவர் குடியேற்றச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதற்காக நாடு கடத்தப்பட்டார். 
He was deported for acting against the immigration law. 

38. Diddle (டீடில்) - ஏமாற்றுதல். 
அவரது கவிதையை பாரதியார் கவிதை என்று கூறி என்னை ஏமாற்றினார். 
He diddled me on saying that his poetry was Bharathiyar′s poetry.

39. Obviate (அப்வியேட்) - அகற்று. 
தரையில் படிந்துள்ள தூசி துகள்களை அகற்று. 
Obviate the dust particles present on the floor. 

40. Orator (ஒரெடர்) - சொற்பொழிவாளர். 
அவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர். 
He is a great orator.

41. Aerial (ஏரியல்) - வான்வழி. 
இது ஒரு வான்வழி யுத்தம்.
This is an aerial battle.

42. Aggressive (அக்ரெஸிவ்) - வலிய தாக்குதல்.
அவர்கள் அண்டை நாட்டிற்கு எதிராக வலிய தாக்குதல் நடவடிக்கைகளை செய்தனர். 
They had done aggressive actions against neighboring country.

43. Aspersion (ஆஸ்பெர்ஸன்) - அவதூறு. 
அவருக்கு எதிராக ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
An aspersion case against him was filed. 

44. Backer (பேக்கர்) - ஆதரவாளர்.
ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை பார்க்க காத்திருந்தனர்.
The backers waited to see the election result. 

45. Beehive (பிஹைவ்) - தேன் கூடு.
ஒரு மாமரத்தின் அருகே ஒரு பெரிய தேன் கூடு இருப்பதை கண்டேன்.
I saw a big beehive on near by mango tree.

46. Beneath (பினீத்) - கீழே. 
இந்த பாறைக்கு கீழே ஒரு பாதாள அறை உள்ளது.
There is a cellar beneath the cliffs.

47. Blob (ப்லாப்) - சொட்டு. 
தட்டில் ஒரு சொட்டுத் தேன் இருந்தது.
There was a blob of honey on the plate.

48. Blister (பிலிஸ்டர்) - கொப்புளம்.
எனது புதிய காலணிகள் பாதங்களில் கொப்புளங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
My new shoes have made blisters on the feet. 

49. Coax (கொக்ஸ்) - பேசி இணங்கவைத்தல்.
அவன் மருந்து சாப்பிடுவதற்காக அவள் நயமாகப் பேசி இணங்கவைத்தாள்.
She coaxed him for taking the medicine. 

50. Coffin (காஃபின்) - சவபெட்டி. 
அவர்கள் சவபெட்டியில் அவளது பெயரை எழுதினார்கள்.
They wrote her name on the coffin.

51. Abnormal (அப்னார்மல்) - அசாதாரணமாக. 
இந்த அளவு எடை குறைப்பு உங்கள் வயதிற்கு அசாதாரணமாக உள்ளது.
This amount of weight loss is abnormal for your age.

52. Ache (ஏக்) - வலி.
முழங்கால் வலியினால் என்னால் இரவு நன்றாக தூங்க முடியவில்லை.
I couldn′t sleep well in the night because of knee ache.

53. Allergy (அலர்ஜி) - ஒவ்வாமை. 
உங்கள் மகனுக்கு சூரிய வெளிச்ச ஒவ்வாமை உள்ளது.
Your son has sunlight allergy. 

54. Amnesia (அம்னிஸியா) - ஞாபக மறதி நோய் 
எனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதால் என்னால் அந்த விபத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை.
I couldn′t remember that accident because I had amnesia.

55. Anemic (அனிமிக்) - இரத்த சோகை.
எனக்கு இரத்த சோகை உள்ளதால் ஆற்றல் குறைவாக உள்ளது. 
I have low energy because I have anemic.

56. Bacteria (பேக்டிரியா) - நுண்ணுயிரி. 
நுண்ணுயிரி பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவுவது அவசியம்.
It is important to wash hands often to prevent the spread of bacteria.

57. Blood count (ப்லட் கவுன்ட்) - இரத்த அணுக்களின் எண்ணிக்கை.
உங்கள் இரத்த அணுக்களின் எண்ணிக்கை மீண்டும் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
Your blood count came back to normal control.

58. Critical condition (கிரிட்டிகல் கன்டிஷன்) - ஆபத்தான நிலை.
அவள் ஆபத்தான நிலையில் இருப்பதால், நீங்கள் இப்போது அவளை பார்க்க முடியாது.
She′s in critical condition, so you can′t see her right now. 

59. Diabetes (டையபிடிஸ்) - நீரிழிவு நோய்.
நீரிழிவு நோய் உள்ள மக்கள் தொடர்ந்து தங்களது இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
People who have diabetes constantly check their blood sugar levels.

60. Diagnosis (டைக்னோஸிஸ்) - நோயறிதல். 
மருத்துவர் நோயாளியிடம் நோயறிதலைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும்.
The doctor must share about the diagnosis with the patient.

61. Demise (டிமைஸ்) - மறைவு.
என் தாயின் மறைவுக்குப் பின்னர் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டேன்.
After my mother′s demise, I stopped to go to school. 

62. Execution (எக்ஸிக்யுஷன்) - மரணதண்டனை.
இளம் குற்றவாளிகளின் மரணதண்டனை ஆனது சர்வதேச சட்டம் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
The execution of young criminals is prohibited by international law.

63. Accident (ஆக்ஸிடன்ட்) - விபத்து. 
அவர் ஒரு விபத்தில் காலமானார்.
He passed away in an accident. 

64. Awful (ஆவ்புல்) - மிக மோசமாக. 
அவரது இறப்பு மிக மோசமாக இருந்தது. 
His death was awful. 

65. Euthanasia (யுதனேசியா) - கருணை கொலை.
பல நாடுகள் சட்டபூர்வமாக கருணை கொலையை நடைமுறையில் அனுமதிக்கிறது.
Many countries are now legally allowing the practice of euthanasia. 

66. Macabre (மெகாபிர்) - கொடூரமான.
பிரஞ்சு புரட்சி காலத்தில், கொடூரமான படுகொலைகள் அதிகமாக நடந்தது.
During the French Revolution, macabre slaughter was too much.

67. Erosion (எரோசன்) - அரிப்பு.
காற்று மற்றும் நீர் மண் அரிப்பின் முக்கிய காரணிகளாக உள்ளன.
Wind and water are the main agents of soil erosion. 

68. Brain death (ப்ரெய்ன் டெத்) - மூளை சாவு.
மூளை சாவால் அவர் பாதிகப்பட்டுள்ளார்.
He was affected by brain death.

69. Mortuary (மார்சுவரி) - சவக்கிடங்கு.
மருத்துவர்கள் சவக்கிடங்கில் பிரேதப் பரிசோதனை செய்து கொண்டுள்ளார்கள்.
The doctors are doing postmortem in mortuary. 

70. Thanatophobia (தனடோபோபியா) - சாவை கண்டு இயற்கை மீறிய பேரச்சம்.
நகரங்களில் உள்ள மக்கள் சாவை கண்டு இயற்கை மீறிய பேரச்சம் கொள்கின்றனர்.
People in cities have thanatophobia.

71. Finance (ஃபினான்ஸ்) - நிதி. 
அவர் தனது திட்டத்தில் ஏற்பட்ட நட்டத்திற்கு நிதியளிக்க தன்னுடைய சகோதரனிடமிருந்து கடனை வாங்கினார்.
He borrowed from his brother to finance the loss he made on the project. 

72. Cheque (செக்) - காசோலை.
காசோலை என்பது ஒரு நபரின் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இன்னொரு நபரிடம் செலுத்தும் ஆவணம் ஆகும். 
A cheque is a document used to pay a specific amount of money from a person′s account to another person.

73. Demand draft (டிமான்ட் டிராஃப்ட்) - கேட்பு வரைவோலை.
கேட்பு வரைவோலைகள் மோசடிக்கு ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.
Demand drafts entail a large potential for fraud.

74. Deposit (டிபொசிட்) - வைப்பு. 
ஆப்கானிய அரசாங்க விதிமுறைகள் படி, பொதுப் பணத்தை எந்த ஒரு தனிப்பட்ட கணக்கில் வைப்பு வைத்துக் கொள்ள உரிமை இல்லை.
According to Afghan government regulations, no one has the right to deposit public money into a personal account. 

75. Interest (இன்ட்ரஸ்ட்) - வட்டி.
வட்டி விகிதம் 6 சதவீதமாக இருக்கும்.
Rate of interest will be 6 percent. 

76. Account (அக்கவுன்ட்) - கணக்கு.
வருமான வரி துறைக்கு கணக்கு காட்டுவதற்காக சுய தொழில் செய்யும் நபர்கள் தங்களுடைய வரவு செலவு கணக்குகளை சரி வர வைத்திருக்க வேண்டும். 
People who are self-employed need to keep a account of their revenue and expenses for tax purposes.

77. Transaction (டிரான்ஸேக்‌ஷன்) - பரிவர்த்தனை. 
என்னுடைய கணக்கில் இருந்து பண பரிவர்த்தனை செய்யப்பட்டது.
Money transaction has made from my account.

78. Saving account (சேவிங் அக்கவுன்ட்) - சேமிப்பு கணக்குகள்.
சேமிப்பு கணக்குகள் சில்லறை நிதி நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Saving accounts are maintained by retail financial institutions. 

79. Cashier (கேஸியர்) - காசாளர்.
அவர் காசாளரிடம் பணத்தை செலுத்தினார்.
He paid the amount to the cashier. 

80. Current account (கரண்ட் அக்கவுன்ட்) - நடப்புக் கணக்கு. 
நான் எனது நடப்புக் கணக்கிலிருந்து ரூ.10,000 எடுக்க விரும்புகிறேன்.
I did like to withdraw Rs.10,000 from my current account.

81. Shrine (ஸ்ரைன்) - ஆலயம்.
அவர்கள் எகிப்தில் உள்ள பார்வோனின் பழமையான ஆலயத்தைப் பார்க்க சென்றனர்.
They went to visit a Pharaoh′s ancient shrine in Egypt. 

82. Monastery (மனெஸ்ட்ரி) - மடம்.
15ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த மடத்தில் ஜெனடி என்ற ஒரு துறவி இருந்தார்.
In the middle of the 15th century, a monk named Genadii was lived in this monastery.

83. Halidom (ஹலிடெம்) - புனித இடம். 
திருடர்கள் புனித இடத்திற்கு செல்ல தயங்குவார்கள்.
Thieves are reluctant to go to the halidom. 

84. Monk (மாங்க்) - துறவி. 
கோவிலில் பல ஞானிகளும் பல துறவிகளும் இப்போதும் உள்ளனர்.
Many saints and monks are still in temples. 

85. Consecrate (கான்சிக்ரேட்) - கும்பாபிஷேகம்.
சிவன் கோவிலில் மறுகட்டுமானம் செய்யப்பட்ட பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Shivan temple was consecrated after reconstruction. 

86. Pray (ப்ரே) - பிரார்த்தனை.
முழு குடும்பமும் அவனுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
The whole family is praying for him.

87. Dilapidate (டிலபிடெட்) - பாழடைந்த. 
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பழைய பாழடைந்த கோவில்களை புதுப்பிக்க உள்ளது.
The Archeological Survey of India is renovating the old dilapidated temples.

88. Priory (ப்ரையிரி) - துறவி மடம்.
கிராமத்தின் மறுபுறத்தில் துறவி மடம் அமைந்துள்ளது.
Priory is located on the other side of the village. 

89. Inscription (இன்ஸ்க்ரிப்ஸன்) - கல்வெட்டுகள்.
பல கல்வெட்டுகள் தஞ்சாவூர் கோவிலில் இன்னும் உள்ளது.
Many inscriptions are still found in the Thanjavur temple. 

90. Pilgrims (பில்க்ரிம்ஸ்) - புனிதப் பயணிகள்.
புனிதப் பயணிகள் தொலைதூர தேசங்களிலிருந்து பரிசுகள் கொண்டு வந்தனர்.
The pilgrims brought gifts from distant lands.

91. Chief Secretary (சீப் செக்ரிடரி) - தலைமை செயலாளர் 
தமிழ்நாட்டில் ஒரு புதிய தலைமை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
A new cheif secratary was appointed in Tamilnadu.

92. Clerk (க்லெர்க்) - எழுத்தர்.
அவர் ஒரு வங்கி எழுத்தர்.
He is a bank clerk.

93. Tahsildar (தாசில்தார்) - வட்டாட்சியர்.
வட்டாட்சியர் கிராமத்திற்கு வருகை தந்தார்.
Tahsildar visited the village. 

94. Stenographer (ஸ்டெனொகிராபர்) - சுருக்கெழுத்தாளர்.
சுருக்கெழுத்தாளர்களுக்கு அதிகமான வேகம் மற்றும் திறமை தேவைப்படுகிறது.
Stenographers will requires more speed and skill. 

95. Typist (டைபிஸ்ட்) - தட்டெழுத்தாளர்.
அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தட்டெழுத்தாளராக பணிபுரிகிறார்.
He is working as a typist in district collector office. 

96. Crafter (க்ராஃப்டர்) - கைதொழில் நிபுணர்.
தென் தமிழகத்தில் பல கைதொழில் நிபுணர்கள் உள்ளனர்.
There are many crafters in southern Tamilnadu.

97. Designer (டிசைனர்) - வடிவமைப்பாளர்.
அவர் ஒரு வரைகலை வடிவமைப்பாளர்.
He is a graphic designer.

98. Researcher (ரிசெர்சர்) - ஆராய்ச்சியாளர்.
காப்பி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதெனவும்கூட சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Some researchers even reported that coffee is healthful. 

99. Reporter (ரிபோர்டர்) - நிருபர்.
பல பத்திரிகை நிருபர்கள் சோதனையில் கலந்து கொண்டனர்.
Many newspaper reporters were took part in trial. 

100. Journalist (ஜோர்னலிஸ்ட்) - பத்திரிகையாளர். 
பத்திரிகையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் கொண்டுவரும் பேரழிவுகளை விவரிக்க அர்மகெதோன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
Journalists and researchers often use the word Armageddon to define catastrophes caused by humans.

101. Telecommunication (டெலிகம்யூனிகேஷன்) - தொலைத்தொடர்பு. 
மாநாடு நடக்கும் இடங்கள் தொலைத்தொடர்பு மூலம் இணைக்கப்பட உள்ளது.
Convention venues will be connected through telecommunication. 

102. Technician (டெக்னிசியன்) - தொழில்நுட்பவியலாளர்.
பலியானவரின் கையில் துப்பாக்கி இருப்பதை தடயவியல் தொழில்நுட்பவியலாளர் கண்டுபிடித்தார்.
The forensic technician found gun in the victim′s hand.

103. Software (சாஃப்டுவேர்) - மென்பொருள்.
இந்தக் கிளை அலுவலகம் ஒரே மென்பொருளை பயன்படுத்துவதால் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
This office branch uses the same software, so they can share information.

104. Cybernetics (சைபர்னெடிக்ஸ்) - தன்னாள்வியல். 
தன்னாள்வியல் என்பது தொடர்புகள் மற்றும் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகளின் அறிவியல் ஆகும்.
Cybernetics is the science of communications and automatic control systems.

105. Bandwidth (பேன்ட்வித்) - கற்றை அகலம்.
அதிகபட்ச பிணைய கற்றை அகலம் பதிவாகியுள்ளது.
Maximum network bandwidth has been recorded. 

106. Graphics (க்ராபிக்ஸ்) - வரைகலை.
இந்த வகை வரைகலைகள் ஒரு கொலைக்களத்தை விவரிக்கும்.
This kind of graphics will describe a bloodbath.

107. Operating System (ஆப்ரேடிங் சிஸ்டெம்) - இயக்க முறைமை.
நீங்கள் இங்கு இயக்க முறைமை பற்றி சில நல்ல வாழ்த்தையோ அல்லது தகவலையோ தெரிவிக்கலாம்.
You can convey some nice greeting or information about the operating system here.

108. Robotics (ரோபோடிக்ஸ்) - இயந்திரவியல்.
இயந்திரவியல் துறையிலும் கணிசமான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
Considerable research is being done in the field of robotics. 

109. Search Engine (சேர்ச் இன்ஜின்) - தேடுபொறி.
தயவு செய்து தேடுபொறியை தேர்வு செய்யவும். 
Please select the search engine. 

110. Microprocessor (மைக்ரோப்ராசஷர்) - நுண்செயலி. 
வட்டு இயக்கி உள் செயல்பாடுகளை கையாள ஒரு நுண்செயலியை கொண்டிருக்கிறது.
Disk drive contains a microprocessor to handle the internal functions.

111. Candle (கேன்டில்) - மெழுகுவர்த்தி.
மனிதனின் வாழ்க்கை பெரும்பாலும் மெழுகுவர்த்தியுடன் ஒப்பிடப்படுகிறது.
Man′s life is often compared to a candle.

112. Bless (ப்லெஸ்) - ஆசீர்வதி.
ஆசிரியர்கள் மாணவர்களை ஆசீர்வதித்தனர்.
Teachers blessed the students.

113. Decorate (டெக்ரேட்) - அலங்கரி. 
இந்த இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
This place is decorated with flowers.

114. Gift (கிஃப்ட்) - பரிசு. 
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, அவள் தனது பெற்றோரிடம் இருந்து கிறிஸ்துமஸ் பரிசை பெற்றாள்.
During Christmas celebration, she received the Christmas gift from his parents.

115. Incarnate (இன்கார்னெட்) - மனித உரு எடுத்த.
இயேசு கிறிஸ்து மனித உரு எடுத்த கடவுள் ஆவார். 
Jesus christ is a incarnate god. 

116. Celebrate (செலிபிரேட்) - கொண்டாடு.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
Christmas is celebrated to remember the birth of Jesus Christ. 

117. Pageant (பேஜன்ட்) - அலங்கார அணிவகுப்பு.
அவரது இளைய மகன் பள்ளி அலங்கார அணிவகுப்பில் கலந்துகொள்கிறார்.
His youngest son is taking part in the school pageant.

118. Bauble (பாப்ல்) - மினுக்குப்பொருள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் கிறிஸ்துமஸ் மரத்தை விளக்குகள் மற்றும் மினுக்குப்பொருளை வைத்து அலங்கரித்தனர்.
For Christmas celebration, children decorated the Christmas tree with embellished lights and baubles. 

119. Delineate (டிலினியேட்) - சித்தரித்தல்.
அவர் எப்பொழுதும் கேட்ட செய்தியை சித்தரித்து கூறுவார்.
He always delineate the news that he heard.

120. Advent calendar (அட்வென்ட் காலண்டர்) - திருவருகை நாட்காட்டி.
திருவருகை நாட்காட்டி கிறிஸ்துமஸ் நாட்களை எண்ண பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு காலண்டர் ஆகும்.
An Advent calendar is a special calendar used to count the days of Christmas.

121. Intimidate (இன்டிமிடேட்) - அச்சுறுத்தல்.
காவல்துறையினர் பாதுகாப்பு கட்டணம் செலுத்தமாறு கடை உரிமையாளர்களை அச்சுறுத்தினர்.
The police intimidate the store owners to pay protection fees.

122. Subversion (சப்வெர்சன்) - நாசவேலை.
நாசவேலை வழக்குக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிறுபிக்கப்படவில்லை.
Criminal charges against subversion cases is not proved.

123. Corpses (கார்ப்ஷஸ்) - சடலம்.
கிணற்றில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.
The corpses was recovered from the well.

124. Association (அஸோஸியேஸன்) - சங்கம்.
அமைச்சரவை சங்கம் வரிகள் மீது ஒரு புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.
The cabinet association decided to enact a new law on taxes.

125. Tornadoes (டோர்னடோஸ்) - சுழற்காற்று.
கோடையில் அடிக்கடி சுழற்காற்று வீசும்.
Tornadoes often blows in the summer.

126. Devastation (டிவாஸ்டேஸன்) - பேரழிவு.
ஓகிப் புயல் கன்னியாகுமாரியில் பேரழிவை உண்டாக்கியது.
Ogi storm caused devastation in Kanyakumari.

127. Euthanasia (யுதனேசியா) - கருணை கொலை.
பல நாடுகள் சட்டப்பூர்வமாக கருணை கொலையை நடைமுறையில் அனுமதிக்கிறது.
Many countries are now legally allowing the practice of euthanasia.

128. Macabre (மெகாபிர்) - இரக்கமற்ற.
பிரஞ்சு புரட்சி காலத்தில், இரக்கமற்ற படுகொலைகள் அதிகமாக இருந்தது.
During the French Revolution, macabre slaughter was too much.

129. Touch screen (டச் ஸ்கிரின்) - தொடு திரை.
என்னுடைய கைப்பேசியில் தொடு திரை வேலை செய்யவில்லை.
Touch screen is not working in my mobile phone.

130. Consecrate (கான்சிக்ரேட்) - கும்பாபிஷேகம்.
சிவன் கோவிலில் மறுகட்டுமானம் செய்யப்பட்ட பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Shivan temple was consecrated after reconstruction.

131. Dissidence (டிசிடன்ஸ்) - எதிர்ப்பு.
மக்கள் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.
People showed their dissidence against terrorist activity.

132. Renaissance (ரெனைசன்ஸ்) - மறுமலர்ச்சி.
மருத்துவ துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
In the medical field, a renaissance has occured.

133. Rigor mortis (ரிகோர் மோடிஸ்) - இறந்த பின் உடலில் ஏற்படும் விரைப்பு. 
இறந்த பின் உடலில் ஏற்படும் விரைப்பபால் மூட்டுகள் மற்றும் தசைகள் மிகவும் கடினமாக இருக்கும்.
The joints and muscles become very stiff when a rigor mortis occurs.

134. Consulate (கன்சுலேட்) - தூதரகம்.
இந்தியாவின் அரசு தூதர் ஜனாதிபதியிடம் பேச அமெரிக்க தூதரகத்தில் இருந்து வந்தார்.
The ambassador of India came from the US consulate to speak to the President.

135. Blizzard (ப்லிஸார்ட்) - பனிப்புயல்.
பனிப்புயல் காரணமாக இந்த விமானம் தாமதமானது.
This flight was delayed due to the blizzard.

136. Diagnosis (டைக்னோஸிஸ்) - நோயறிதல்.
மருத்துவர் நோயாளியிடம் நோயறிதலைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும்.
The doctor must share about the diagnosis with the patient.

137. Awful (ஆவ்ஃபுல்) - மிக மோசமான.
அவரது இறப்பு மிக மோசமானதாக இருந்தது.
His death was awful.

138. Militancy (மிலிடென்ஸி) - போர்க்குணம்.
அவரது நடவடிக்கை போர்க்குணத்திற்கு எதிராக இருந்தது.
His action was against militancy.

139. Incision (இன்சிஸன்) - ஆழமான கீறல்.
மருத்துவர்களால் அவரது உடலில் ஒரு ஆழமான கீறல் கண்டறியப்பட்டது.
The doctors detected an incision on his body.

140. Referendum (ரெஃபரென்டம்) - வாக்கெடுப்பு.
நம் சகோதரர்கள் தேசிய வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியவில்லை.
Our brothers could not vote in the national referendum.

141. Simulant (சிமுலன்ட்) - போலியான
அவர் அளித்த பொருட்கள் அனைத்தும் போலியானது.
The things that he gave is simulant.

142. Chimerical (சிமெரிக்கல்) - ஆதாரமற்ற
இந்த நிகழ்வு உண்மையானதாக இருக்கலாம், ஆனால் அது ஆதாரமற்றதாக நாங்கள் நினைக்கிறோம்.
The phenomenon may be real, but we think it is chimerical.

143. Rove (ரோவ்) - திரி
மூன்று திருடர்கள் சாலையில் திரிந்து கொண்டிருந்தனர்.
Three theives roved in the road.

144. Trek (டிரெக்) - நீண்ட பிரயாணம்
மலையின் அடிவாரத்திற்குப் பிரயாணம் செய்ய ஒரு வாரம் எடுத்துக்கொள்ளும்.
It took us a week to trek to the foot of the mountain.

145. Agate (அகேட்) - இரத்தினக் கல் வகை
அவரது வீட்டில் உள்ள வினிகர் பாட்டில் கூட இரத்தின கல் வகையால் செய்யப்பட்டது.
Even the vinegar bottle in his house is made of agate.

146. Pushy (புசி) - அடாவடியான
அவர் மிகவும் அடாவடியாக இருப்பதன் மூலம், புகழை இழந்தார்.
He made himself unpopular by being so pushy.

147. Culvert (கல்வெர்ட்) - மதகுப் பாலம்
ஒரு 10 மீட்டர் நீளம் கொண்ட சிறிய மதகுப் பாலம், லாஸ்வேட் சாலைக்கு கீழே கடக்கிறது.
A 10 metres length smaller culvert, crosses beneath Lasswade Road.

148. Dopey (டோபெ) - மயக்கநிலை
நான் இன்று காலை முதல் மயக்கநிலையாக உணர்கிறேன்.
I′m feeling really dopey from this morning.

149. Faze (ஃபேஜ்) - மன அமைதியை இழக்கச் செய்
மிக மோசமான முடிவால், அவரது மன அமைதியை இழக்கச் செய்ய முடியாது.
The worst results cannot faze him.

150. Linger (லிங்கர்) - தாமதி
துரதிருஷ்டவசமாக வரி ஏப்ரல் மாதம் வரை தாமதிக்கிறது.
Unfortunately the tax will linger on until April month.

151. Bazaar (பஜார்) - அங்காடி.
நாங்கள் அங்காடியில் ஒரு அழகிய கம்பளிக்கு பேரம் பேசினோம்.
We bargained for a beautiful rug in the bazaar.

152. Bizaree (பிஜாரி) - மாறுபட்ட.
இது நான் பார்த்த மிக மாறுபட்ட விஷயங்களில் ஒன்றாகும்.
This is one of the most bizarre. things I′ve ever seen.

153. Cede (ஸீட்) - விட்டுக்கொடுத்தல்.
ஜனவரி மாதம் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதாக பொது அதிகாரி உறுதியளித்தார்.
The General officer had promised to cede power by January.

154. Seed (ஸீட்) - விதை.
எனக்கு ஆப்பிள் மரங்கள் விதைகளிலிருந்து வளருகிறது என்று தெரியாது.
I didn′t know apple trees grow from seeds.

155. Chute (சூட்) - சரிவு.
ஏணியில் ஏறுவது வேடிக்கையாக இருக்கும், ஆனால் சரிவில் கீழே இறங்குவதற்கு மிகவும் பரபரப்பாக இருக்கும்.
Climbing up the ladder was fun, but sliding down the chute was much more exciting.

156. Shoot (சூட்) - சுடு.
அவர்கள் பார்வையில் எதிரிகளை சுட கேட்டுக் கொண்டனர்.
They were told to shoot enemies at sight.

157. Serf (செர்ஃப்) - அடிமை.
அந்த அடிமை தனது உரிமையாளரால் தாக்கப்பட்டார்.
That serf was beaten up by his owner.

158. Surf (ஸர்ஃப்) - உலாவுதல்.
ஒவ்வொரு கோடையிலும் ஹவாய் கடற்கரையில் நாங்கள் உலாவுகிறோம்.
We surf in the Hawaii beach every summer.

159. Stationary (ஸ்டேஷனரி) - நிலையான.
பணவீக்க வீதம் பல மாதங்களுக்கு நிலையானதாக உள்ளது.
The rate of inflation has been stationary for several months.

160. Stationery (ஸ்டேஷனரி) - எழுதுபொருள்.
எழுதுபொருள் முதல் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளது.
Stationery is kept in the first cupboard.

161. Divisive (டிவிசிவ்) - பிரிவினை.
வியட்நாம் போர் அமெரிக்காவில் மிகப் பெரிய பிரிவினை பிரச்சனையாக இருந்தது.
The Vietnam war was an extremely divisive issue in the US.

162. Commentator (கமென்டேட்டர்) - உரையாசிரியர்.
நகைச்சுவையாளர் வெள்ளிக்கிழமை உரையாசிரியரை வெளிப்படுத்தினார்.
The comedian outdrew the commentator on Friday.

163. Ingest (இன்ஜெஸ்ட்) - உட்கொள்ளல்.
பாம்புகளால் தனது உடலின் இரு மடங்கு அளவு இரையை உட்கொள்ள முடிகிறது.
Snakes are able to ingest prey twice the size of their body.

164. Maternal (மேட்டர்னல்) - தாய்வழி.
அவரது தாய்வழி தாத்தா கராச்சியின் மேயராக இருந்தார்.
Her maternal grandfather was Mayor of Karachi.

165. Bedridden (பெட்ரிட்டன்) - நோய் கொண்டு படுக்கையில் கிடக்கிற.
நோய் கொண்டு படுக்கையில் கிடக்கிற மக்கள் எளிதாக நிமோனியாவை பெற முடியும்.
People who are bedridden can easily got pneumonia.

166. Croquet (க்ரொகியுட்) - புல் வெளியில் விளையாடப்படும் பந்தாட்டம்.
அரசி புல் வெளியில் விளையாடப்படும் பந்தாட்டத்தை விளையாட விரும்புகிறார்.
The queen wants to play croquet.

167. Derisory (டெரிசரி) - தேவைக்குக்குறைந்த.
எங்களுக்கு ஒரு தேவைக்குக்குறைந்த தொகை வழங்கப்பட்டது.
We were awarded a derisory amount.

168. Embalming (எம்பாமிங்) - பிணப் சீரமைப்பு.
பிணப் சீரமைப்பு மூலம் பிணம் சிதைவிலிருந்து பேணிக்காக்கப்பட்டது.
The corpse was preserved from decay by embalming.

169. Gluttonous (குளுடோனஸ்) - பெருந்தீனிக்காரன்.
அவர் அலுவலகத்தில் ஒரு பெருந்தீனிக்காரர் ஆவார்.
He is a gluttonous guy in the office.

170. Juncture (ஜங்சர்) - சூழ்நிலை.
இந்த சூழ்நிலையில் நிறுவனத்தின் எதிர்காலத்தை கணிப்பது மிகவும் கடினம்.
It is very difficult at this juncture to predict the company′s future.

171. Bough (பவ்) - மரக்கிளை.
ஒரு மரக்கிளை ஆற்றில் மிதக்கிறது.
A bough floats in the river.

172. Bow (பவ்) - தலை வணங்கு.
நேரம் உங்களுக்கு தலை வணங்காது, நீங்கள்தான் நேரத்திற்கு தலை வணங்க வேண்டும்.
Time does not bow to you, you must bow to time.

173. Flea (ஃப்ளி) - உண்ணி.
ஒரு உண்ணியால் அதன் உயரத்தில் 300 மடங்கு வரை குதிக்க முடியும்.
A flea can jump upto 300 times its own height.

174. Flee (ஃப்ளி) - விரைவாக தப்பி ஓடுதல்.
யாராவது அவளை கண்காணிக்க முடியும் என்றால், அவள் விரைவாக தப்பி ஓட வேண்டும்.
If someone was able to track her, she needed to flee fast.

175. Fright (ஃப்ராய்ட்) - பயம்.
கச்சேரிக்கு முன் ஒரு சிறிய மேடை பயம் இயல்பானது.
A little stage fright is normal before a concert.

176. Freight (ஃப்ராய்ட்) - சரக்கு.
அந்த உயர்த்தும் சாதனம் சரக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
That elevator is used for freight only.

177. Sew (சீவ்) - தையல்.
அவள் கையால் அவளது ஆடைகளை தைத்துக்கொள்கிறாள்.
She sews her own dresses by hand.

178. Sow (ஸோ) - விதைத்தல்
ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு அளக்கு விதைக்க வேண்டும்.
It is well to sow at least two bushels to the acre.

179. Which (விச்) - எது
உனக்கு எது வேண்டும்?
Which one do you want?

180. Witch (விச்) - சூனியக்காரி
சூனியக்காரி ஏழை சிறுமியை சபித்தாள்.
The witch cursed the poor little girl.

Comments